Murali Parthasarathy

63 Flips | 1 Magazine | @muraliparth8nl9 | Keep up with Murali Parthasarathy on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “Murali Parthasarathy”

Log In or Sign Up to View

This Facebook post is no longer available. It may have been removed or the privacy settings of the post may have changed.

Target 3 Billion

சர்வ தோஷ நிவாரண மந்திரம்..! ஓம் நமோ பகவதே விஷ்ணவே ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே சர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினே சாளக்ராமாய ஸ்வாஹா’ இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச் செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம். ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நம சிவாய

இதில் நீங்க எந்த ரகம் ? காலைப் பாருங்க, பின்னூட்டம்(comment) போடுங்க!

மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன.... ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜன் பெறலாம்....

வேதத்தில் தத்துவத்தை உபதேசிக்கும் பகுதி உபநிஷதம். "உபநிஷத்' என்ற சொல்லுக்கு,"அருகில் உட்கார்ந்து கொள்வது' என்று பொருள். உபநிஷதம் ஒருவனை கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் தகுதி படைத்தது. வேதத்தில் 1180 சாகைகள் <உண்டு. ஒரு சாகைக்கு, ஒரு உபநிஷதம் வீதம் 1180 உபநிஷதங்கள் இருந்தன. ஆனால், நம் கையில் கிடைத்தது 108 மட்டுமே. இந்த 108க்கும் உரை எழுதியவர், உபநிஷத் பிரமேந்திராள். இதில் முக்கியமானவை பத்து. அவற்றை "தசோபநிஷத்' என்று குறிப்பிடுவர். இந்த பத்தில் விவேகானந்தருக்கு பிடித்தமானது கடோபநிஷத். மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை பற்றி எமதர்மனுடன் வாதிடும் சிறுவன் நசிகேதஸ் பற்றி விவேகானந்தர் அடிக்கடி தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். "எழுமின்! விழிமின்! குறிக்கோளை எட்டும்வரை ஓயாது உழைமின்!' என்பது விவேகானந்தரின் குறிப்பிடத்தக்க பொன்மொழி. இந்த பொன்மொழியை, கடோபநிஷத்தில் இருந்தே விவேகானந்தர் எடுத்துக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள் சில அடிப்படைகள் அஸ்டகர்மம் மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம் 6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள் வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா. இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல். மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா. இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல். தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா. இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது. உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா. இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா. இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா. இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா. இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது. மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா. இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார். பலா பலகை - தம்பனம் மாம் பலகை - மோகம் வில்வம் - வசியம் பேய்த்தேத்தான் - பேதனம் எட்டிப்பலகை - வித்துவேடணம் அத்திப்பலகை - மாரணம் வெண்நாவல் - ஆக்ருசணம் வெப்பாலை - உச்சாடனம். இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார். மல்லிகை - வசியம் முல்லை - மோகனம் தும்பை - உச்சாடனம் அரளி - ஆக்ருசணம் காக்கனமலர் - வித்துவேடணம் ஊமத்தம் - பேதனம் கடலைமலர் - மாரணம் தாமரை - தம்பனம் இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர். செம்பட்டு - வசியம் மஞ்சள் பட்டு - மோகனம் பச்சைப்பட்டு - தம்பனம் வெள்ளைப் பட்டு - பேதனம் கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம் பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம் ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம் கருப்பு வண்ணப்பட்டு - மாரணம். சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப் பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம். கிழக்கு - இந்திரன் - தம்பனம் தென்கிழக்கு - அக்கினி - மோகனம் தெற்கு - எமன் - மாரணம் தென்மேற்கு - நிருதி - உச்சாடனம் மேற்கு - வருணன் - ஆக்ருசணம் வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம் வடக்கு - குபேரன் - பேதனம் வடகிழக்கு - ஈசன் - வசியம் இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும். மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். உருத்திராட்சம் - வசியமாகும் மிளகுமணி - மோகனந்தான் துளசிமணி - உச்சாடனம் தாமரைமணி - தம்பனம் நாகமணி - மாரணம் சங்குமணி - ஆக்ருசணம் எட்டிமணி - வித்துவேடணம் வெண்முத்து - பேதனம் இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார். ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம் திங்கள் - தம்பனம் செவ்வாய் - மோகனம் புதன் - மாரணம் வியாழன் - உச்சாடனம் வெள்ளி - ஆக்ருசணம் சனி - வித்துவேடணம் மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..! * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை * வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை * காய்ச்சலை போக்கும் தன்மை * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator) * கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:- * ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும். * துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும். * ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல் குணமாகும்.

Narayanan Gopalan

Chada FM

"வழுதுணங் காய்" என்பது நீளமான பச்சைக் கத்தரிக் காயின் பழந் தமிழ்ப் பெயர்!

மரணம் பற்றிய மா்மங்கள் உடலும் உயிரும் நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன. அவற்றை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. குண சரீரம் 4. கஞ்சுக சரீரம் 5. காரண சரீரம் என்பா். இவற்றை 1. அன்னமய கோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும் சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள். 1. அன்னமய கோசம் நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள். 2. பிராணமய கோசம் வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம். 3. மனோமய கோசம் ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும். பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும். 4. விஞ்ஞானமய கோசம் ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும். 5. ஆனந்தமய கோசம் பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள். வேதாந்திகள் சொல்வது மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை 1. தூல சரீரம் 2. சூக்கும சரீரம் 3. காரண சரீரம். இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து. தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது 1. பிராணமய கோசம் 2. மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம் காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம். விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை. மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது. உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை! அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம். எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம். மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம். மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான். கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான். ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான். கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது. காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா். சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா். தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா் மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது. சூக்கும சரீரம் – விளக்கம் தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலைஅடிகள். ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அவா். அருள்திரு அடிகளார் அனுபவம் ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள். அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது. இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு. புலவா் சொக்கலிங்கம் அனுபவம் ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார். “ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்தபோது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்” என்றார். பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும். இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார். இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள். இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள். இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள். உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள். இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.

சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!. இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிகளுக்கும் உருவம் உண்டு...! ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர். "ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே!" பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின. இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை.... மேலும் அறிய... http://www.siththarkal.com/2010/04/blog-post_12.html .

தெளிவு குருவின் திருவடி! "இந்த மனிதர் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார். அவரை எந்தத் துன்பமும் தீண்ட முடியாது". என்னை ஆட்கொண்ட எண்ணமிதுதான். என்னுள் எழும் கேள்விகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அவற்றிற்கு மகரிஷியிடமிருந்து விடைகளைப் பெற மீண்டுமொரு முறை முயன்று பார்க்கத் தீர்மானித்தேன். மகரிஷியின் பக்தர் ஒருவர் ஹாலை அடுத்த குடிசை ஒன்றில் ஏதோ வேலையாக இருந்தார். அவர் இவ்வளவு நாட்களாக என்னிடம் மிகவும் அன்பாக இருந்தவர். அவரயடுத்துச் சென்று அவருடைய குருநாதருடன் கடைசியாக ஒருமுறை உரையாட நான் தீவிரமாக விரும்பினேன் என்பதை கூறினேன். மகரிஷியிடம் நானே நேராகப் போய் பேசுவதில் எனக்குண்டான கூச்சத்தையும் மனம் விட்டுச் சொன்னேன். அவர் இதைக் கேட்டு மிகவும் ஆதரவாகப் புன்முறுவல் பூத்தார். அவர் உடனே ஹாலுக்குச் சென்றார். விரைவிலேயே நல்ல சேதி கொண்டு வந்தார். அவர் குருநாதர் என்னுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வாராம். நான் ஹாலுக்கு விரைந்தேன். சோபாவினருகே உரையாடுவதக்குத் தகுந்த இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன். உடனேயே மகரிஷி முகத்தைத் திருப்பினார். அவரது உதடுகளில் ஒரு அன்பான புன்முறுவல் மலர்ந்தது. உடனேயே என் தயக்கமெல்லாம் மறைந்து நான் சுதந்திரமாக அவரிடம் கேள்விகள் கேட்கலானேன். "சத்தியத்தைக் கண்டறிய விரும்புபவன் இந்த உலகத்தைத் துறந்து தனிமையான காடுகளுக்கோ, மலைகளுக்கோ சென்று விட வேண்டுமென யோகிகள் கூறுகிறார்கள். எங்கள் மேலை நாடுகளில் நாங்கள் வாழும் முறை வேறுபட்டது. இப்படியெல்லாம் செய்வது முடியும் காரியமில்லையே. நீங்கள் யோகிகள் கூறுவதை ஆமோதிக்கிறீர்களா?" கம்பீரமாக தோற்றமளித்த ஒரு அந்தண பக்தர் பக்கம் திரும்புகிறார் மகரிஷி. அவர் மகரிஷி கூறியதை எனக்காக மொழி பெயர்த்தார். "கர்மா வாழ்க்கையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் த்யானம் செய்தால், பின் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவது, அப்பொழுது எழும் அமைதியான மனநிலை நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தொடர்ந்து நீடிக்கும். த்யான நேரத்து மனநிலை நீங்கள் உலகக் காரியங்களைச் செய்யும் பொழுதும் அவற்றில் பிரதிபலிக்கும்." "அப்படி செய்வதால் உண்டாகும் விளைவு என்ன?" "அப்படி செய்து வருங்கால், மனிதர்களிடம் நீங்கள் உறவாடும் விதத்திலும், வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்கள் மற்றும் உலகப் பொருட்கள் மீது நீங்கள் கொள்ளும் கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஒரு மாறுதல் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்கள் செய்கைகளும் த்யானமாகவே ஆகிவிடும், உங்கள் முயர்ச்சியின்றியே". "அப்படியானால் யோகிகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லையா?" மகரிஷியை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்ல வைக்க என் முயற்சி இது. ஆனால் மகரிஷி நேரடியாக பதில் சொன்னால் தானே! "தன்னை இந்த உலகத்துடன் பந்தப்படுத்தும் சுயநலச் சிறுமையை விட்டுவிடுதல் வேண்டும். பொய்யான "நான்" அதாவது அகந்தையை விட்டு விடுதலே உண்மையான துறவு". "சுயநலமேயின்றி இவ்வுலகில் செயல்படுவது எப்படி சாத்தியமாகும்?" "கர்மம், ஞானம் இரண்டிற்கும் இடையே எவ்வித முரண்பாடுமில்லை". "அப்படியானால் ஒருவன் வழக்கம்போல் தனது தொழில், உத்தியோகம் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவன் ஞானம் பெற முடியும் என்கிறீர்களா?" "ஏன் முடியாது? ஆனால் ஞானமடைந்தவன், இன்னும் இந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது பழைய ஆள்தான் என்று நினைக்க மாட்டான். ஏன் என்றால் அவனுடைய அகந்தை மனது மெல்ல மெல்ல மாறி அந்த சிறு மனதிற்கு அதீதமாயுள்ள தனது நிஜஸ்வரூபமாகிய ஆன்மாவில் ஒடுங்கிவிடும். "காரியங்களில் ஈடுபட்டுள்ளவனுக்கு, த்யானம் செய்யப் போதிய நேரமிருக்காதே?" மகரிஷி சிறிது நேரம் மோனம் பாலித்தார், பிறகு விடையளித்தார். "த்யானத்திர்க்கென்று நேரம் ஒதுக்குவதெல்லாம் ஆன்மீக சாதனையில் புதிதாகப் பிரவேசித்தவர்களுக்குத்தான் வேண்டும்.சாதனையில் முன்னேறிக் கொண்டு வருபவன், காரியம் செய்கிறானோ செய்யவில்லையோ, ஆழமான அக அமைதியை அனுபவிப்பது நிச்சயம். கூட்டத்தின் நடுவிலிருந்துகொண்டு, பணியில் ஈடுபட்டுள்ள பொழுதே அவன் மனது ஏகாந்தத்தில் சாந்தமாக இருக்கும்". "அப்படியானால் நீங்கள் யோக மார்க்கத்தைப் போதிப்பதில்லையா?" "யோகியானவன், மாடு மேய்ப்பவன் காளையைத் தடி கொண்டு ஊக்குவிப்பது போன்று, தன் மனதை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான். இந்த மார்கத்திலோவேனில், சாதகன் முரட்டுக் காளையின் முன் பசும் புல்லைக் கட்டியே வழிக்கு கொண்டு வருகிறான்". "அதை எப்படி செய்வது?" "நான் யார்" என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த விசாரம், முடிவில் உங்களை மனதிர்கப்பாலுள்ள ஒன்றைக் கண்டறிய வழி செய்யும். அந்தப் பெரும் கேள்விக்கு முதலில் விடை பெறுங்கள். அதன்மூலம் பிற கேள்விகளுக்குமே விடை பெறுவீர்கள்". மகரிஷியின் விடையில் பொதிந்திருந்த ஆழ்ந்த பொருளைப் பற்றிய சிந்தனயிலாழ்ந்தேன். ஹாலில் மௌனம் நிலவியது. அநேக இந்தியக் கட்டிடங்களை போலவே இங்கு சுவரில் பெரிய துளையிட்டு சதுரச் சட்டமும் கம்பியுமிட்டு ஜன்னலாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் வழியாகப் புனித அண்ணாமலையின் கீழ்ச் சரிவுகள் மிக அழகாகத் தெரிந்தன. அதிகாலை சூரிய ஓளி அதன் விந்தையான வரி வடிவத்தை ரமணியமாக்கியது. மகரிஷி மறுபடியும் என்னிடம் பேசினார். "வேறு விதமாகச் சொல்கிறேன். தூய ஆனந்தம் அனுபவிக்க வேண்டுமென்றுதான் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள். முடிவில்லாமல் தொடரும் ஆனந்தத்தைத் தேடி அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இது ஒரு இயல்பான நாட்டமே. ஆனால் எல்லோரும் தன்னையே மிக அதிகமாக நேசிக்கிரார்களே, இதைக் கவனித்து ஆச்சரியப்பட்டதில்லையா நீங்கள்?" "ஆமாம். ஆனால் அதைக் கவனித்ததில்லை......." "மனிதர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனத்தின் மூலம் - தெய்வ நம்பிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலேயோ - பரம சுகத்தை அடைய எப்பொழுதும் விரும்புகிறார்கள் இல்லையா? இந்த உண்மையுடன் அதையும் இணைத்துப் பாருங்கள். மனிதனின் ஸ்வரூபத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தடயம் கிடைக்கும்." "நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லையே!" மகரிஷி இப்பொழுது குரலை உயர்த்திப் பேசினார். "மனிதனின் உண்மை இயல்பு ஆனந்தம். நிஜஸ்வரூபத்தில் ஆனந்தம் அதன் உண்மை இயல்பாகவே உள்ளது. ஆனந்தத்தைத் தேடும் மனிதன் அவனறியாமலேயே தன் நிஜஸ்வரூபத்தைத் தான் தேடுகிறான். நிஜஸ்வரூபமாகிய ஆன்மா அழிவற்றது. எனவே அதை அடையும் ஒருவன் முடிவில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறான்." "ஆயின் உலகம் மாபெரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறதே?" "ஆமாம், உலக மக்கள் தம்மையே அறியாதிருப்பதுதான் அதற்குக் காரணம். எல்லா மனிதர்களும், தெரிந்தோ, தெரியாமலோ, ஆனந்தத்தையே நாடுகிறார்கள்." "துஷ்டர்களும், குரூரமானவர்களும், தீமை செய்பவர்களும் கூடவா?" என்றேன். "அவர்கள் பாபம் செய்வது கூடத் தாம் செய்யும் ஒவ்வொரு பாபச் செயலிலும் தான் தேடும் சுகத்தை அடைய முயல்வதால்தான். இவ்வாறு சுகத்தை நாடுவது மனிதனின் இயல்புதான், ஆனால் சுகத்தைத் தேடும் தாம் தாங்கள் நிஜஸ்வரூபத்தையே தேடுகிறோம் என்பதறியாமல் இதுபோன்ற தீய வழிகள் மூலம் ஒருவேளை அந்த சுகம் கிடைக்குமா என்று முதலில் அவற்றைச் செய்து பார்க்கிறார்கள். ஆனால் தவறான செயல்கள், செய்பவனையே பாதிக்கின்றன." "எனவே நாம் இந்த நிஜஸ்வரூபத்தை அறிந்தால் அழியா ஆனந்தம் பெறுவோமோ?" மகரிஷி தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார். திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு சரிவான சூரிய கரணம் மகரிஷியின் முகத்தின் மீது படிந்தது. பதட்டமேயற்ற அவர் புருவங்களில் தூய அமைதி நிலவியது. அந்த உறுதியான அதரங்களில் திருப்தி மிளிர்ந்தது. அந்தக் காந்தமிகு கண்களில் தேவாலயத்தில் நிலவும் சாந்தி மண்டிக் கிடந்தது. அவரது தூய ஞானோபதேசத்திர்க்குக் கட்டியங் கூறியது, அவரது சுருக்கமே இல்லாத சுந்தர வதனம்.மகரிஷி பேசியதெல்லாம் மிக எளிய சொற்றொடர்கள்தான். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்? மொழி பெயர்த்தவர் என்னென்னமோ கூறினார். ஆனால் அவரால் தெரிவிக்க முடியாத ஆழ்ந்த பொருள் மகரிஷியின் சொற்களில் பொதிந்திருந்தன. அதை நான்தான் எனக்காகவே கண்டறிய வேண்டுமென்பதும் தெரிந்தது. ஒரு தத்துவ அறிஞ்சர் போன்றோ அல்லது ஒரு பண்டிதர் போன்றோ தமது சித்தாந்தத்தை விளக்கி கூருவதர்க்காகச் சொற்களை கையாளுபவர் அல்லர் மகரிஷி. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்தே, அவரது பெறர்க்கரிய பேரான அத்மானுபூதியின் அடையாளமாகவே அன்றோ சொற்கள் வந்தன! "நீங்கள் "தான்" "அது" என்று குறிப்பிடுவது எதனை? நீங்கள் கூறுவது உண்மையெனில், மனிதனுக்குள் இன்னொரு "தான்" இருக்கிறதென்று பொருள் படும் இல்லையா?" மகரிஷி புன்முறுவல் பூத்தார். குருவருள் ......... தொடரும்!

ஜாதி லிங்கத்தில் இருந்து பாதரசம் எடுக்கும் முறை..! முதலில் நல்ல தரமான ஜாதி லிங்கத்தை வாங்கி அதை எலும்மிச்சை சாற்றில் மூன்று நாள் ஊறவைத்து சுத்தி செய்த பின்னர் சித்தர்கள் முறைப்படி வெடியுப்பு திராவகம் செய்து ஜாதி லிங்கத்தை கல்வத்தில் இட்டு திராவகம் ஊற்றி இரண்டு ஜாமம் அரைத்து வெய்யிலில் காயவைத்து பின்பு அதை இரண்டு பானைகளை வாயை தேய்த்து மட்டமாகச் செய்துகொண்டு உள்ப்பகுதியில் குப்பைமேனி சாற்றை பூசி காயவைத்து. பிறகு ஜாதிலிங்கத்தை கீழ் பானையில் இட்டு மேல் பானை மூடி வாய்க்கு சீலைமண் செய்து மூன்று சாமம் எரித்து ஆறின பிறகு மேல் சட்டியில் இரசம் நிற்கும் அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்கொண்டு கிழே உள்ள லிங்கத்தை மீண்டும் திராவகம் ஊற்றி இரண்டு சாமம் அரைத்து காயவைத்து எடுத்து பானையில் வைத்து மீண்டும் மேல் பானை மூடி வாய்க்கு சீலைமண் செய்து மூன்று சாமம் எரித்து ஆறின பிறகு மேல் சட்டியில் லிங்கம் முழுவதும் இரசமாக மாறி நிற்கும் இதுவே சித்தர்கள் சொன்ன வாலை இரசம் ஆகும். சாதாரண கடையில் கிடைக்கும் இரசம் அடர்த்தி குறைவாக இருக்கும் லேசாக கருப்பு வர்ணம் கலந்து இருக்கும் ஆனால் வாலை இரசம் அடர்த்தி அதிகமாகவும் சுத்தமான வெள்ளை நிறமாக காணப்படும்.

மணத்தக்காளி கீரை..! மணத்தக்காளி கீரைக்கு.. மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம். www.siththarkal.com <<>>

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.., 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம் இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை. நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுபிடிப்பும்!!! பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?. அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிஷி!

மச்ச சாத்திரம் பெண்களுக்கு.. ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும். நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள். மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள். மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள். மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள். இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள். கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள். தலையில் மச்சம் தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. ஆடம்பர வாழ்வு நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள். கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும். இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள். கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். அந்தஸ்து மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும். காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும். நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும். கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும். இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும். மார்பில் மச்சம் பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள். தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும். முதுகில் மச்சம் கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும். உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட. பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும். தொடை இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும். இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி. ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

தலை முடி வளர..! அறிகுறிகள்: முடி உதிர்தல். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை. படிகாரம் நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய். செய்முறை: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை. ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர். கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்! ---------------------------------------------------------------------------- ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்! தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்! சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை! 1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்! அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்: “இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு. நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது. இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”

மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு.. · இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். · நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். · வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். · வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். · வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். · வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். · இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். · இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். · இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். · இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். · இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள். · இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். · மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். · மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். · மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். · மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும். · மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள். · நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். · மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். · மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். · மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும். · மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள். · வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். · இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார். · வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும். · இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். · இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும். · தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். · கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். · கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார். · இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார். · வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார். · மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். · வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். · வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். · வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். · தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். · வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார். · வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். · இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள் · முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள். · முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார். · முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

Akshat Singh

Z cyklu Ziemia nie z tej ziemi: "lodowe kwiaty".

முகப்புத்தகபுரம்