Raghavendran Rajendra Prasad

6 Flips | 3 Magazines | @RAGHAVENDRA13en | Keep up with Raghavendran Rajendra Prasad on Flipboard, a place to see the stories, photos, and updates that matter to you. Flipboard creates a personalized magazine full of everything, from world news to life’s great moments. Download Flipboard for free and search for “Raghavendran Rajendra Prasad”

பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்! http://bit.ly/1kGriDK ‘தொழில்வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயத்துக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் வேலையை மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்தார், தற்போது அதை படுவேகமாக முடித்து வைக்கும் வேலை மோடி சிரமேற்கொண்டுவிட்டார் என்பதைத்தான் அதில் சுட்டிக் காட்டியிருந்தேன். இதற்கு பின்னூட்டம் போட்ட நண்பர்களில் சிலர், நான் என்னவோ மோடிக்கு எதிரி போலவும், 'வளர்ச்சி'க்கு எதிரி போலவும் சித்தரித்தார்கள். சிலரோ... மோடி இப்போதுதானே வந்திருக்கிறார் என்று வக்காலத்தும் வாங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'வந்த வேகத்திலேயே பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளின் உத்தரவுகளை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்' என்று மோடி காட்டி வரும் வேகம் துளிகூட புரியவில்லையா... அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஆம், பி.டி எனும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பரிசோதனைக்கு இத்தனை காலமாக நீடித்த தடைகளையெல்லாம் மீறி, தற்போது 15 விதமான உணவுப் பயிர்களில் இந்தப் பரிசோதனையைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுரையை மேலும் படிக்க http://bit.ly/1kGriDK

''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' ''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.'' - ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.